2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

தேசபந்துவை பதவி நீக்கும் பிரேரணைக்கு 151 பேர் ஆதரவு

Editorial   / 2025 ஏப்ரல் 08 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாய விடுமுறையில் இருக்கும் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்காக விசாரணைக் குழு நியமிக்கப்பட வேண்டுமென முன்வைக்கப்பட்ட யோசனை  பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) சமர்ப்பிக்கப்பட்டது. அதனை, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர, சமர்ப்பித்தார்.

 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் தும்பற சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மாத்தறை வெலிகம ஹோட்டலொன்றுக்கு அருகில் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின் போது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரியொருவர்  உயிரிழந்த மற்றும் மற்றுமொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் அவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X