2025 மார்ச் 16, ஞாயிற்றுக்கிழமை

தேசபந்துவின் மனைவி மற்றும் மகனிடம் வாக்குமூலம்

Freelancer   / 2025 மார்ச் 15 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் மனைவி மற்றும் மகனிடமிருந்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். 

ஹோகந்தரவில் உள்ள வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழு இந்த வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 

மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்த போதிலும், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இதுவரையில் முன்னாள் பொலிஸ்மா அதிபரை கண்டுபிடிக்க முடியவில்லை. 

அதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழு அவரது வீட்டிற்குச் சென்ற போதிலும், அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து, வீட்டை தொடர்ந்து சோதனைக்கு உட்படுத்தி வந்த அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை தேசபந்து தென்னகோனின் மகன் மற்றும் மனைவியிடம் விசாரணை நடத்தியதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .