Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 பெப்ரவரி 24, திங்கட்கிழமை
Editorial / 2025 பெப்ரவரி 24 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக (ஐ.ஜி.பி.) நியமிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது அடிப்படை உரிமைகள் மனுக்கள் திங்கட்கிழமை (24) அன்று உயர் நீதிமன்றத்தால் வாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 06, 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமெனவும் உத்தரவிட்டுள்ளது.
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரண திங்கட்கிழமை (24) அன்று உயர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, தேசபந்து தென்னக்கோன் சார்பில் நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றுவதற்கு தேசபந்து தென்னக்கோனுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால், மனுக்கள் மீதான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டத்தரணியின் கோரிக்கையை கருத்தில் கொண்ட நீதவான், இந்த மனுக்கள் எதிர்வரும் மே மாதம் 06, 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டுள்ளார். (S.R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
24 minute ago
1 hours ago