Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை
Simrith / 2024 டிசெம்பர் 04 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (டிசம்பர் 04) முதல் அமுலுக்கு வரும் வகையில் நாளாந்தம் 200,000 கிலோ அரிசியை வழங்க அரிசி ஆலைகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் சமரசிங்க இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.
அரசாங்கத்திற்கு சொந்தமான சில்லறை விற்பனை நிறுவனமான லங்கா சதொச ஊடாக உள்ளூர் சந்தைக்கு இந்த அரிசி கட்டுப்பாட்டு விலையில் வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
புறநகர் பகுதிகளில் உள்ள சதொச விற்பனை நிலையங்கள் ஊடாகவும் ஒரு மில்லியன் தேங்காய் விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அடுத்த இரண்டு வாரங்களில் தேங்காய்கள் 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
2 hours ago
2 hours ago