2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

தகாத வேலைச்செய்த ஆணும், பெண்ணும் சிக்கினர்

Mayu   / 2023 டிசெம்பர் 14 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை மாணவிகள் மற்றும் பெண்களை நிர்வாணப்படுத்தி, ஆபாசமாக புகைப்படங்களை எடுத்து, காணொளிகளை தயாரித்து இணையத்தில் பதிவேற்றி வந்த பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் ஆபாச காணொளி மற்றும் புகைப்படங்களை வைத்து மாதமொன்றுக்கு இலட்சத்துக்கும் அதிக வருமானம் ஈட்டி வருவதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கண்டி பிரதேசத்திலுள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகமொன்றின் கல்வி கற்கும் ஆண் மாணவரொருவரும், ருவன்வெல்ல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட அரச பல்கலைக்கழகமொன்றில் கல்வி கற்கும் 29 வயதுடைய பெண் மாணவியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்  என  பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் பிரிமத்தலாவ பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து மிகவும் நுணுக்கமாக இந்த செயலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பல்கலைக்கழக மாணவன், பொறியிலாளர் என்றும், மாணவி வைத்தியர் என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .