2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

டெங்குவை கண்டறிய ட்ரோன்

Editorial   / 2025 மார்ச் 27 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெங்கு நுளம்பும் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அடையாளம் காணும் நடவடிக்கை  நுகேகொடையில், வியாழக்கிழமை (27) ஆரம்பிக்கப்பட்டது.

சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவும் மேல் மாகாண சபையும் இணைந்து மூன்று நாட்களுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றன.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுப்டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து வருவதாகக் கூறினார்.

இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜெயசிங்க மற்றும் மேல் மாகாண சுகாதார செயலாளர் எல்.ஏ. கலுகாபு ஆராச்சி ஆகியோரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X