2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

டிசம்பரில் இருந்து வெளிநாட்டு கடவுச்சீட்டு

Freelancer   / 2024 நவம்பர் 01 , பி.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகத்தை விரைவுபடுத்த முடியும் என எதிர்ப்பார்ப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் 7 இலட்சத்திற்கும் அதிகமான வெற்று கடவுச்சீட்டுக்கள் கிடைக்கப்பெற உள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான முறையான இணையவழி முறைமை தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் தினத்தில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X