Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 செப்டெம்பர் 18 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜம்மு - காஷ்மீரின் ஏழு மாவட்டங்களில் உள்ள 24 சட்டசபை தொகுதிகளில், இன்று (செப்.,18) முதற்கட்ட ஓட்டுப்பதிவு துவங்கியது.
யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில், மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அக்., 8இல் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
பா.ஜ., மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி தனியாகவும் காங்., - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணியாகவும் போட்டியிடுவதால், மும்முனை போட்டி நிலவுகிறது.
90 சுயேச்சைகள் உட்பட 219 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம், 23.27 இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ஏழு மாவட்டங்களில் உள்ள 24 சட்டசபை தொகுதிகளில், இன்று (செப்.,18) முதற்கட்ட வாக்குப்பதிவு துவங்கி நடந்து வருகிறது. 3,276 ஓட்டுச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.
2019ல் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டதால், அங்கு சட்டசபை தேர்தல் நடக்கவில்லை. 10 ஆண்டுகளுக்கு பின், தற்போது தான் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
இது குறித்து, சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், 'ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் உள்ள அனைவரும் அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத்தின் திருவிழாவை வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக முதல்முறை வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
11 minute ago
21 minute ago