Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2024 ஒக்டோபர் 12 , மு.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில், ஐனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் 'மாம்பழம்' சின்னத்தில் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடவுள்ள ஜனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் சிலர், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது 'மாம்பழம்' சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாவை சேனாதிராஜாவுக்கு மாம்பழத் தை வழங்கிவைத்தனர்.
இந்தச் சந்திப்பில் ஐனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஜங்கரநேசன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
39 minute ago
2 hours ago