2025 ஏப்ரல் 21, திங்கட்கிழமை

ஜனாதிபதியின் முடிவுக்கு நன்றி தெரிவித்தார் திலித்

Freelancer   / 2025 ஏப்ரல் 09 , பி.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த நெருக்கடியான மற்றும் சவாலான காலங்களில் சர்வக் கட்சி மாநாட்டைக் கூட்ட வேண்டும் என்ற ஜனாதிபதியின் முடிவுக்கு சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீர தனது X கணக்கில் நன்றி தெரிவித்துள்ளார். 

அனைத்து உள்ளூர் தொழில்முனைவோர் சார்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அரசாங்கத்திற்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக திலித் ஜயவீர சுட்டிக்காட்டுகிறார். 

இந்த நாட்டு மக்களின் நல்வாழ்வு மற்றும் செழிப்பை எல்லாவற்றிற்கும் மேலாகக் கருதி, தானும் எதிர்க்கட்சித் தலைவர்களும் அரசாங்கத்தை எல்லா வழிகளிலும் ஆதரிக்கத் தயாராக இருப்பதாகவும், அவர் கூறியுள்ளார்.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X