2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

ஜனாதிபதியின் இந்திய விஜயம் குறித்து விளக்கம்

Freelancer   / 2024 டிசெம்பர் 20 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இந்த நாட்டின் பிரதேசத்தை எவருக்கும் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை என, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க உடனடியாகத் தலையீடு செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டதாக, அமைச்சர் விஜித ஹேரத் கூறினார்.

இதேவேளை, மஹவ-ஓமந்தைக்கு இடையிலான தண்டவாளத்தை நவீனமயமாக்குவதற்கு இந்தியா வழங்கிய கடன் உதவியை மானியமாக பரிசீலிக்க இந்தியா தீர்மானித்துள்ளதாகவும், அமைச்சர் குறிப்பிட்டார்.AN

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .