2024 செப்டெம்பர் 23, திங்கட்கிழமை

ஜனாதிபதிக்கு செந்தில் தொண்டமான் வாழ்த்து

Janu   / 2024 செப்டெம்பர் 23 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒன்பதாவது ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவிற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார் .

வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை ஐந்து வருடங்களுக்குள் நல்லதொரு நிலைக்கு கொண்டு வந்து நாட்டை அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்ல புதிய ஜனாதிபதியால் முடியும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார் .

மேலும் , தமது கட்சியின் கோரிக்கைக்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்களித்த மலையக மக்களுக்கும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்திய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் நன்றியை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் .

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .