2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ஜனக்கவிடம் கப்பம் வாங்கிய மூவ​​ர் சிக்கினர்

Editorial   / 2023 ஒக்டோபர் 29 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் கோடீஸ்வர வர்த்தகருமான ஜனக்க ரத்னாயக்கவிடம் 15 இலட்சம் ரூபாயை கப்பம் பெற்றனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கொழும்பு குற்றப் பிரிவு அறிவித்துள்ளது.

டுபாயில் தலைமறைவாக இருக்குமு் புளுமெண்டல் சங்கா, என்ற பெயரில் தொலைப்பேசி அழைப்பை ஏற்படுத்தி, இந்த கப்பத்தை அவர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் 16ஆம் திகதியன்று காலை 7.10க்கும் காலை 9 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் புளுமெண்டல் சங்க என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட நபர்,  என்னை படுகொலைச் செய்வதற்கு 80 இலட்சம் ரூபாய்க்கு குத்தகையை கொடுத்துள்ளதாகவும் அந்த குத்தகையை செய்யாமல் விடுவதற்கு தனது 15 இலட்சம் ரூபாயை வழங்குமாறும் தொலைப்பேசி ஊடாக தெரிவித்தார் என ஜனக்க ரத்னாயக்க பொலிஸில் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அ​ந்த அழைப்பை அடுத்து தன்னுடைய காரியாலத்தில் இருந்த பணத்தில் 15 இலட்சம் ரூபாயை, தனக்கு தொலைபேசி அழைப்பை எடுத்திருந்த நபருக்கு வழங்குமாறு தன்னுடைய பணியாளருக்கு அறிவித்ததாக ஜனக்க ரத்னாயக்க செய்திருந்த முறைப்பாட்டில் ​மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .