2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

சொக்லேட்டில் செத்த எலி

Editorial   / 2024 ஜூன் 20 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொக்லேட் சிரப்பில் செத்த எலி கிடக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.

 கடந்த இரண்டு வாரங்களில் இதுபோன்று நடக்கும் மூன்றாவது சம்பவம் இதுவாகும்.

அண்மையில் மும்பை மலாட் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் ஒன்லைன் மூலம் பட்டர்ஸ்காட்ச் கோன் ஐஸ்கிரீம் ஓர்டர் செய்துள்ளார். ஐஸ் கிரீம்மை ஆசையோடு உட்கொண்டபோது அதில் நகத்துடன் மனித விரல் ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே நொய்டாவை சேர்ந்த தீபா என்பவர் தனது 5 வயது மகனுக்கு மில்க் ஷேக் செய்வதற்காக ஐஸ்கிரீம் ஓர்டர் செய்துள்ளார். இதில் பூரான் ஒன்று இறந்து கிடந்ததைக் கண்டு பதறிப்போயுள்ளார்.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் மாட்டு இறைச்சியில் செத்துப்போன பல்லி ஒன்று கிடந்துள்ளது.

இந்நிலையில், தற்போது பல்லி ஒன்று சொக்லேட் சிரப்பில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சிரப்பை தனது குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்கொண்டதாகவும், அதன் பின்னரே அதில் எலி இறந்து கிடப்பது தெரியவந்தது என்றும் உட்கொண்டவரில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர்களில் ஒருவருக்கு சிகிச்சை தேவைப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .