2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

சீருடை துணி விநியோகம் நிறைவு

Freelancer   / 2025 மார்ச் 22 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்து பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளும், பிரிவேனா துறவிகளுக்கான அங்கிகளும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு 10,096 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாடசாலைகளுக்கும், 822 அங்கீகரிக்கப்பட்ட பிரிவேனாக்களுக்கும் சீருடைகள் மற்றும் துணிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சீருடை துணி வழங்கப்பட்ட மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 4,640,086 ஆகும். இதற்கு தேவையான மொத்த துணி அளவு சுமார் 12 மில்லியன் மீட்டர் துணி ஆகும்.

இது சீன அரசாங்கத்திடமிருந்து மானியமாகப் பெறப்பட்டதாகவும், கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.AN


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .