2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

சிவராத்திரி அன்று பகலில் இருளாகும்

Editorial   / 2022 பெப்ரவரி 28 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளைக்கு (01) நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மூன்று மணிநேர மின்வெட்டு நாளைய தினம் அமுல்படுத்தப்படவுள்ளது என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.

இதன்படி, நாளை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 க்கும் இடையில், இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றார்.

இதேவேளை, தேவையேற்படும் பட்சத்தில் மாத்திரம் இரவு வேளைகளில் 30 நிமிட மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

அதிக மின்சார கேள்வி நிலவும் பகுதிகளிலேயே இந்த 30 நிமிட மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

எனவே, நாளை (01) மாலை 6 மணி முதல் இரவு 10 மணிக்குள் மின்சார பயன்பாட்டை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு   ஆணைக்குழுவின் தலைவர், கேட்டுக்கொண்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .