2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

சிறுமியை பிணைவைத்து பணம் பறித்தவருக்கு விளக்கமறியல்

Editorial   / 2023 நவம்பர் 15 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நோய்வாய்ப்பட்ட சிறுமிக்கு சத்திரசிகிச்சை செய்யவேண்டுமென  கூறி அச்சிறுமியின் தாயை பயமுறுத்தி 2 இலட்சம் ரூபாயை ​பெற்று ஏமாற்றினார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், கைது செய்யப்பட்ட சந்தேகநபரை   எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெலிசர நீதவான் துசித தம்மிக்க உடுவாவிதான, செவ்வாய்க்கிழமை (14) உத்தரவிட்டார்.

பமுனுகம பொலிஸ் உத்தியோகத்தர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய சந்தேக நபரை விளக்கமறியலில் வைத்த நீதவான், சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்வரும் 22 ஆம் திகதி நீதிமன்றில் அறிவிக்குமாறு பமுனுகம பொலிஸாருக்கு உத்தரவிட்டார். .

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட, கிரந்துருகோட்டே ஜயந்திபுர பிரதேசத்தை சேர்ந்த மதுஷங்க ஏகநாயக்க என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள பிரபல சர்வதேச பாடசாலையொன்றில் கல்வி கற்கும் சிறுமியின் தாய் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை முன்வைத்து இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பமுனுகம பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .