2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

சிப்பாயின் உயிரைக் குடித்த உடற்பயிற்சி

Editorial   / 2023 செப்டெம்பர் 01 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் கடற்படையில் இணைந்துகொண்ட சிப்பாய் ஒருவர் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, திடீரென சுகயீனமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமடைந்துள்ளார்.

வவுனியா பூனேவ கடற்படை முகாமையில் இணைந்துகொண்ட, அனுராதபுரம், திறப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த நிமந்த டில்ஷான் தயாரத்ன என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

புதன்கிழமை (30) அன்று காலையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டுகொண்டிருந்த போது திடீரென சுகயீனமடைந்தார். அவரை பூனே கடற்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .