2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

சின்ன பாப்பாவை வீசிய ஜோடி சிக்கியது

Editorial   / 2023 ஓகஸ்ட் 09 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிறந்த சிசுவை உடனடியாக வீதிக்கு கொண்டு வந்து கொன்று வீசிய  கணவன் மனைவியை முல்லேரியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அக்குழந்தையின் தந்தையென கூறப்படும் நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

  முல்லேரியா பண்டார மாவத்தை களனிமுல்ல தெருவில் உள்ள அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை (8) இரவு சிசுவை பெற்றெடுத்துள்ளதுடன்,   சிசுவை கொன்று வீதிக்கு கொண்டு வீசியுள்ளனர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

இரத்தக் கறைகளைத் தொடர்ந்து சென்ற பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குச் சென்று   ஜோடியை கைது செய்துள்ளனர்.

 சந்தேகத்திற்கிடமான கணவனும் மனைவியும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .