Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
Editorial / 2025 மார்ச் 05 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்ஷன் வினோத்
யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் உள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்புக்கு மேலதிகமான கண்காணிப்பு பணிக்கு மயான அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஐவரை நியமிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கினுடைய கலந்தாய்வு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா தலைமையில், செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்றது
குறித்த கலந்துரையாடலில் காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் சட்டத்தரணி தற்பரனும் முறைப்பாட்டாளர் சார்பில் சட்டத்தரணி சுகாசும், நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மயான அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
குறித்த எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட மயானத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு உரிய வகையில் வழங்கப்பட வேண்டும் என்றும் பொலிஸ் பாதுகாப்புக்கு மேலதிகமாக குறித்த மயானத்தினுடைய அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு பணியை மேற்பார்வை செய்வதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என சட்டத்தரணிகளால் கோரப்பட்டது.
இதனை ஆராய்ந்த நீதவான், மயான அபிவிருத்தி சங்கத்தின் சார்பில் ஐந்து உறுப்பினர்களை பணியில் ஈடுபடுத்த அனுமதி வழங்கினார். வழக்கு தொடர் விசாரணைக்காக திகதியிடப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
7 hours ago
18 Apr 2025