Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Editorial / 2024 செப்டெம்பர் 05 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்மாவின் தங்கையான 22 வயதான சித்தியுடன், 17 வயதான சிறுவன் மாயமான சம்பவம், வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே ஒரு பகுதியை சேர்ந்த சிறுவனுக்கு 17 வயதுதான் ஆகிறது.. அதே பகுதியை சேர்ந்தவர் 22 வயது பெண்ணுக்கு சிறுவன் மீது விருப்பம் இருந்துள்ளது.
இந்த பெண், ஆம்பூர் அருகே ஒரு ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.. 17 வயது சிறுவன் இந்த பெண்ணுக்கு ஒருவகையில் உறவினரும்கூட, அதனால், ஒரே குடும்பம் என்பதால், கடந்த ஒரு வருட காலமாகவே நெருக்கமாக பழகி வந்திருக்கிறார்.
ஒருகட்டத்தில், சிறுவனை காதலிப்பதாக சொல்லி தன்னுடைய வலையிலும் இந்த பெண் விழவைத்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, அந்த சிறுவனை அழைத்து கொண்டு மாயமாகிவிட்டார்..
சம்பவத்தன்று, சிறுவனின் வீட்டுக்கு சென்ற இளம்பெண், வெளியில் போவதாக சொல்லி அழைத்து சென்றிருக்கிறார். ஆனால், மறுபடியும் 2 பேருமே வீட்டுக்கு திரும்பவில்லை.
இதனால், 2 வீட்டு குடும்பத்தினரும் பதறிப்போய்விட்டார்கள். எனவே, ஆளுக்கு ஒருபக்கம் இருவரையும் தேட ஆரம்பித்தனர். அப்போதுதான், சிறுவனுக்கு ஆசைவார்த்தை கூறி இளம்பெண் அழைத்து சென்றதாகவும், குடியாத்தம் அடுத்த சிந்தகணவாய் முனீஸ்வரர் கோயிலில் சிறுவனை வைத்து தாலி கட்டிக் கொண்டதாகவும் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், குடியாத்தத்துக்கு விரைந்துள்ளனர்.. ஆனால், அதற்குள் அந்த பெண் திருமணம் முடித்த கையுடன், சிறுவனை அங்கிருந்து அழைத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்.. இதனிடையே, இளம்பெண் சிறுவனை திருமணம் செய்த விவகாரம், பேரணாம்பட்டு சமூக நலத்துறை அலுவலர் தனலட்சுமிக்கு தெரியவந்தது. அவர் உடனடியாக குடியாத்தம் மகளிர் பொலிஸூக்கு விஷயத்தை சொல்லி, இது தொடர்பாக புகாரையும் தந்தார்..
அதன்படி வேலூர் எஸ்பி மதிவாணன் உத்தரவின்படி மகளிர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, சிறுவனையும், இளம்பெண்ணையும் தேடி கொண்டிருக்கிறார்கள். 17 வயது சிறுவனை கடத்தி, அந்த பெண் எங்கே வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை..
திருமணம் செய்து கொண்டு வெளியூருக்கு சென்றுவிட்டதாக சொல்கிறார்கள்.. ஆனால், கோயிலில் கல்யாணம் நடந்த விஷயம், அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு தெரியவந்துள்ளது.. அதற்கு பிறகுதான், இந்த திருமணம் குறித்து சம்பந்தப்பட்ட துறையினருக்கு இலவச உதவி எண் மூலம் தொடர்பு கொண்டு புகார் அளித்திருக்கிறார்கள். இப்போது போலீசார் உட்பட இரு வீட்டு குடும்பத்தினரும், இருவரையும் தேடி வருகிறார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
10 minute ago
15 minute ago
29 minute ago