2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

சாள்ஸ் நிர்மலநாதனை சந்தித்தார் ரணில்

Editorial   / 2024 செப்டெம்பர் 17 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ்.ஆர்.லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக   வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மரியாதையின் நிமித்தம்   பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனை அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை(17)   சந்தித்திருந்தார்.

இதன் போது மன்னார் தமிழரசு கட்சியின் கிளை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,பொதுமக்கள் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.

அதேநேரம் தமிழரசு கட்சியின் மன்னார் கிளையின் இளைஞர் அணி மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் வருகை தந்த பொது மக்களுடன் சாள்ஸ் நிர்மலநாதனின் வீட்டில் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றிருந்தது.

குறித்த சந்திப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சால்நிர்மலநாதனிடம் வினவிய நிலையில் இது ஒரு மரியாதையின் நிமித்தமான சந்திப்பு எனவும் ஜனாதிபதி தேர்தலில் ஒட்டுமொத்த மன்னார் மக்கள் மற்றும் ஆதரவாளர்களின் முடிவே எனது முடிவு எனவும் மக்கள் யார் பக்கமோ அவர்களின் பக்கமே நான் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .