2025 ஜனவரி 18, சனிக்கிழமை

செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 74 பேருக்கு எதிராக வழக்கு

Freelancer   / 2025 ஜனவரி 18 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த பொதுத் தேர்தலில், அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியலில் இடம்பெற்றிருந்த வேட்பாளர்கள் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 74 பேருக்கு எதிராக வழக்குத் தொடர தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் மேலதிக தேர்தல் ஆணையாளர் (சட்ட) சட்டத்தரணி சிந்தக குலரத்னவிடம் நாம் வினவிய வினவியபோது, 

இந்த நாட்களில் வேட்பாளர் பட்டியல்களை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக, செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 134 அரசியல் கட்சிகளுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு வழக்குத் தொடர்வதாக, குலரத்ன குறிப்பிட்டார்.

செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் எண்ணிக்கை எண்ணூறுக்கும் மேலதிகமாகும்.AN



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X