2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

சபை குழுக்களில் இருந்து அலி சப்ரியை நீக்கவும்: சஜித்

Editorial   / 2023 செப்டெம்பர் 12 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுபாயிலிருந்து சுமார் எட்டு கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் மற்றும் கைத்தொலைபேசிகளை சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்தமைக்காக 75 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை, அவர் பிரதிநிதித்துவப்படுத்தும்   பாராளுமன்ற குழுக்களில் இருந்து நீங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது,

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவே, இந்த கோரிக்கையை சபாநாயகரிடம் அண்மையில் கையளித்துள்ளார்.  

 பாராளுமன்ற உறுப்பினர் அலி சபிரி ரஹீம், நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் என பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உறுப்பினர் ரஹீமின் முறைகேடு தொடர்பில் பாராளுமன்றத்தின் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளதால், விசாரணை முடியும் வரை அந்தக் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில் இருந்து தடைவிதிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் பிரேரணையில் குறிப்பிட்டுள்ளார்.

 பாராளுமன்ற உறுப்பினர் ரஹீமின் தவறான நடத்தை குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணையையும் சபாநாயகரிடம் ஐக்கிய மக்கள் சக்தி கையளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .