2025 ஜனவரி 15, புதன்கிழமை

சீனா பறந்தார் ஜனாதிபதி

Freelancer   / 2025 ஜனவரி 13 , பி.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு 13ஆம் திகதி இரவு சீனா சென்றார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் மற்றும் சீன பிரதமர் லீ சங் (Li Qiang) மற்றும் இராஜதந்திரிகளை சந்திக்க உள்ளார்.

அத்தோடு இந்த  விஜயத்தில், தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட துறைசார்  பல கள விஜயங்களிலும்   ஜனாதிபதி  பங்கேற்க உள்ளதோடு பல உயர் மட்ட வர்த்தகக் கூட்டங்களிலும் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.

அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X