2025 ஜனவரி 15, புதன்கிழமை

சீன ஜனாதிபதியுடன் நாளை சந்திப்பு

Editorial   / 2025 ஜனவரி 14 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர், சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை, புதன்கிழமை (15) சந்திக்கிறார்

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம்  மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புதன்கிழமை (15) பிற்பகல் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை  (Xi Jinping) சீன மக்கள் மண்டபத்தில் சந்திக்கிறார்.

இலங்கை ஜனாதிபதிக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் பின்னர் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட  எதிர்பார்க்கப்படுகிறது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X