Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 பெப்ரவரி 23, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 22 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்தின் சுபீட்சத்திற்கான பிராந்திய பணிப்பாளர் மேத்யூ வர்கிஸ், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரியை பிரதமர் அலுவலகத்தில் வைத்து சந்தித்தார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார தொலைநோக்கு, தற்போது நடைமுறைப்படுத்தப்படும் சீர்திருத்தங்கள் மற்றும் உலக வங்கிக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன.
கலந்துரையாடலின் போது, உலக வங்கியின் பிரதிநிதிகள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் முன்னேற்றம் குறித்து நன்றி தெரிவித்ததுடன், பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான சாதகமான நடவடிக்கையாக அரசாங்கத்தின் 2025 வரவுசெலவுத் திட்ட உரையை பாராட்டினர்.
பயனுறுதிவாய்ந்த கொள்கை அமுலாக்கத்தின் முக்கியத்துவத்தை தூதுக்குழுவினர் வலியுறுத்தியதுடன், தடைகளின்றி சர்வதேச முகவர் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பை உறுதி செய்வதில் பிரதமர் அலுவலகத்தின் முக்கிய பங்கையும் சுட்டிக்காட்டினர்.
பிரதமரின் செயலாளர் சபுதந்திரி, அரசாங்கத்தின் முன்னுரிமைகள் பற்றி விளக்கியதுடன், 2025 வரவு - செலவுத் திட்டம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை, நல்லாட்சி மற்றும் பேண்தகு அபிவிருத்தியை மையமாகக் கொண்டதாகக் குறிப்பிட்டார்.
முதலீட்டை ஊக்குவித்தல், வர்த்தகத்துறைக்கான வசதிகளை வழங்குதல் மற்றும் டிஜிட்டல் மயப்படுத்தல் ஆகியவற்றில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு குறித்தும் அவர் விளக்கினார். ஊழலுக்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டுடன், பாதிக்கப்படக்கூடிய சமூகக் குழுக்கள் எதிர்கொள்ளும் சமூக-பொருளாதார சவால்களை எதிர்கொள்வது முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.
சுகாதாரம், கல்வி மற்றும் சுற்றுலாத் துறைகளில் அபிவிருத்திக்கு விசேட முக்கியத்துவம் அளித்து, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் (SMEs) மற்றும் விவசாயத் துறைக்கான விநியோகங்களை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் செயலாளர் வலியுறுத்தினார்.
கொள்கைத் திட்டமிடலில் பேண்தகுதன்மை மற்றும் சமூகப் பாதுகாப்பை முன்னிறுத்தி, இந்த அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குத் தேவையான சட்டச் சீர்திருத்தங்கள் குறித்தும் கவனம்செலுத்தப்பட்டு வருவதாக பிரதமரின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் டி.ஏ.டி.டி. பிரேமரத்ன மற்றும் உலக வங்கியின் ஆசிய பிராந்திய பிரதிநிதிகளும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.AN
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .