Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Freelancer / 2022 பெப்ரவரி 06 , பி.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மின்சாரத்தை துண்டித்து அதிகாரத்தைப் பெற முயற்சிக்க வேண்டாமென தெரிவிக்கும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, மின்சாரப் பிரச்சினைக்குப் பின்னால் சதி இருக்கிறது எனவும் மக்களைக் கொன்று, சடலங்களை வைத்து அரசியல் செய்ய முயல வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், எரிவாயுப் பிரச்சினையே பின்னால் யாரோ இருப்பதாக சொன்னேன். அப்போது என்னை விமர்சித்தார்கள். இப்போது காஸ் வெடிப்பதை பார்த்திருக்கிறீர்களா? என்று கேள்வியெழுப்பினார்.
பேஸ்புக்கிலுள்ள அனைத்து ஜே.வி.பிகாரர்களும் என்னைக் குற்றம் சாட்டத் தொடங்கினர். கெட்ட வார்த்தையில் அவர்கள் என்னை ஏசினார்கள். பேஸ்புக் ஊடாக ஜே.வி.பி.,யின் ஒழுக்கத்தை நீங்கள் நன்றாகக் கவனிக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.
மின்சாரத்திலும் இதே போன்ற பிரச்சினை உள்ளது. மாதக்கணக்கில் மூடப்படுகிறது. இந்த மின் நெருக்கடிக்குப் பின்னால் ஏதோ இருக்கிறது என்பதை மக்கள் உணரவில்லையா? இதன் பின்னணியில் சதி உள்ளது. ஜனாதிபதியின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த இடமளிப்பதில்லை . இந்த விடயங்களுக்குப் பின்னால் ஏதோ இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
மக்களை கொன்று பிணங்களை வைத்து அரசியல் செய்ய முயலாதீர்கள். மின்சாரத்தைத் துண்டித்து அதிகாரத்தைப் பெற முயலாதீர்கள். அவை தவறான செயல்களாகும் எனவும் பெர்னான்டோ தெரிவித்தார்.
தேவாலயத்தில் வெடிகுண்டு வைத்தவர்தான் பெல்லன்வில கோவிலில் வெடிகுண்டு வைத்தவர். ஆஸ்பத்திரியில் வெடிகுண்டு வைத்தும் அதே மனிதர் தான். குண்டு வெடித்திருந்தால் தேசிய பாதுகாப்பு பற்றி கோட்டாபய பேசுவதில் பயனில்லை என்பார்கள் என்றார்.
பொலிஸாரைப் பயன்படுத்தி இது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி பணித்திருந்தார். யாரையும் தப்பிக்க விடாதீர்கள் என்று ஜனாதிபதி கூறினார். இவற்றின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை நாம் சரியாகப் பார்க்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
9 hours ago
29 Apr 2025