Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2024 ஓகஸ்ட் 21 , பி.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோருக்கு எதிர்க்கட்சித் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச விடுத்திருந்த அழைப்பின் பேரில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில், புதன்கிழமை (21) இருவரும் சஜித் பிரேமதாசவை சந்தித்து சமகால அரசியல் சூழ்நிலைகள் சம்பந்தமாக கலந்துரையாடினர்.
இதன்போது கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள், சமகாலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சமூகம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் எதிர்க்கட்சித் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசவிடம் எடுத்துரைத்திருந்தார்.
இங்கு கலந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் அவர்கள் முஸ்லிம் சமூகம் சார்ந்த விடயங்கள் தொடர்பில் பல விஷயங்களை வலியுறுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago