2025 ஜனவரி 03, வெள்ளிக்கிழமை

சஜித் பிரேமதாச தீபத் திருநாள் வாழ்த்து

Freelancer   / 2024 ஒக்டோபர் 31 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அறியாமை இருளை அகற்றி ஞானத்தின் ஒளியால் உலகமே ஒளிமயமாகட்டும். உலகெங்கிலும் உள்ள இந்து மக்களின் இதயங்களை ஒளிமயமாக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு, இலங்கை மற்றும் உலகெங்கிலும் வாழும் இந்து மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று ஐக்கிய மக்கள் சக்தித் தலைவர்  சஜித் பிரேமதாச  விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பெரும் இருளை ஒரு சிறு விளக்கொளியால் அகற்ற முடியும். அதற்குத் தேவையானது சரியான பார்வையும் வழிகாட்டுதலும் மட்டுமே. அறியாமை இருளை அகற்றி ஞானத்தின் ஒளியால் உலகை ஒளிமயமாக்கும் தீபாவளி பண்டிகை நமக்கு உணர்த்துவதும் இதுவேதான்.

ஒரு நாடாக இந்த தருணத்தில் நமக்கு பல சவால்கள் உள்ளன. இந்த சவால்கள் அனைத்தையும் வெற்றி கொள்ள முடிவது இனம், மதம், சாதி, குலம், கோத்திர வேறுபாடுகளின்றி அனைவரும் கைகோர்த்தல் மட்டுமே.

அவ்வாறு அனைவரும் கைகோர்க்க இன்று ஏற்றும் ஒரு விளக்கொளி வழிவகுக்கட்டும். அன்பு, கருணை, ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகிய அனைத்து உணர்வுகளையும் ஒளிரச் செய்து, ஒருவருக்கொருவர் வெறுப்புக்குப் பதிலாக சகோதரத்துவத்தை பரப்பும் தீபாவளி விளக்கொளியால் உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடையட்டும் என பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X