2025 மார்ச் 12, புதன்கிழமை

சிகரெட்டுகளை கடத்த முயன்ற சுங்க அதிகாரி உட்பட மூவர் கைது

Simrith   / 2025 மார்ச் 12 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

9 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்றதற்காக சுங்க அதிகாரி ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிகரெட்டுகளுடன் வெளியேற முயன்றபோது கைது செய்யப்பட்டனர். 

துபாயிலிருந்து வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒரு வர்த்தகரும் அவரது உதவியாளரும் இலங்கை வந்துள்ளனர். 

பின்னர் சுங்க அதிகாரி தனது உத்தியோகபூர்வ அடையாள அட்டையுடன் விமான நிலையத்திற்குள் நுழைந்து சிகரெட்டுகளை விமான நிலையத்திற்கு வெளியே எடுத்துச் செல்ல முயன்றார்.

இருப்பினும், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (PNB) அதிகாரிகள் அவர்களின் திட்டத்தை முறியடித்து, விமான நிலைய வளாகத்தில் அவர்களைக் கைது செய்தனர். 

சந்தேக நபர்களிடமிருந்து 300 அட்டைப்பெட்டிகள் வெளிநாட்டு சிகரெட்டுகளை PNB அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

சந்தேக நபர்கள் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .