Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Janu / 2024 ஓகஸ்ட் 09 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
காஞ்சிபுரம் , குருவிமலை பகுதியில் உள்ள ஆலயமொன்றுக்கு ஊர் மக்களால், ஆடி மாதத்தின் போது பால்குடம் எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில் திருவிழா பதாகைகள் ஊரை அலங்கரித்து வந்துள்ளதுடன் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், தங்கள் புகைப்படங்களையும், திரை நட்சத்திரங்களின் புகைப்படங்களையும் பதாகைகளில் வைத்து அழகு பார்த்துள்ளனர்.
இந் நிலையில், கோவில் பதாகையொன்றில், பிரபல கவர்ச்சி நடிகை மியா கலிஃபா பால் குடம் தூக்குவது போல் சித்தரித்து இருந்தமை அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.
அதற்கு ஒரு தரப்பினரிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், மற்றொரு தரப்பினரோ, கோவில் திருவிழா சார்ந்த பதாகையில் ஆபாச நடிகையின் புகைப்படம் இடம்பெறுவதா? எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த தகவல் பொலிஸாருக்கு தெரியவந்ததையடுத்து பொலிஸார் குறித்த இடத்திற்கு நேரில் சென்று அந்த பதாகையை அங்கிருந்து அகற்றியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago