2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

கோவிலில் புகுந்து காசுமாலை திருடியவர்களுக்கு வலை

Simrith   / 2025 மார்ச் 25 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டியில் உள்ள ஒரு இந்து கோவிலில் பணத்தால் செய்யப்பட்ட மாலையை இரண்டு பேர் திருடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கண்டி நிட்டவெல வீதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவம், கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளது. 

அந்த காணொளியில், இரண்டு ஆண்கள் பிரார்த்தனை செய்வது போல் நடித்து கோவிலுக்குள் நடந்து செல்வதையும், அருகில் வேறு யாரும் இல்லை என்பதை உறுதிசெய்த பிறகு, அவர்கள் ஒரு சிலையிலிருந்து மாலையை அகற்றுவதையும் காணலாம்.

ஒரு நபர் தனது டி-ஷேட்டுக்குள் மாலையை மறைத்து வைத்துள்ளார், அதன் பிறகு இருவரும் கோவிலை விட்டு வெளியேறுவதைக் காணலாம். 

இந்த திருட்டு சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X