2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

கொரோனாவின் புதிய உப பிறழ்வு ’கிராகன்’

Freelancer   / 2023 ஜனவரி 04 , பி.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிராகன் என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனாவின் புதிய உப பிறழ்வானது உலகளாவிய ரீதியில் பரவிவருவதாகவும் அதனால் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரில் தொகை அதிகரித்துள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டின் உப பிறழ்வான XBB1.5 எனப்படும் கிராகன் தொற்றினால் அமெரிக்காவில் 40 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின்  ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிறழ்வினால் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் மூவர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்திலும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .