2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கூரையில் இருந்து கீழே விழுந்த நபருக்கு காயம்

Mayu   / 2023 டிசெம்பர் 05 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருதானை புகையிரத நிலையத்தின் கூரையில் இருந்து இன்று (05) காலை தவறி விழுந்து ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த நபர் 5 மற்றும் 6 ஆகிய தளங்களை இணைக்கும் கூரையின் மீதேறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

நபரை கீழே இறக்குவதற்கு மருதானை பொலிஸார் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில், முற்பகல் 11.20 மணியளவில் குறித்த நபர் மேற்கூரையில் சென்று கொண்டிருந்த போது கீழே விழுந்துள்ளார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மருதானை பொலிஸார் மற்றும் ரயில்வே பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .