2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கூட்டுத்தாபனமும் விலைகளை அதிகரிக்குமா?

Freelancer   / 2022 பெப்ரவரி 08 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், எரிபொருள் விலையை அதிகரிக்காது என்று தெரிவித்த எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, மசகு எண்ணெய் விலை அதிகரிப்பினால் கூட்டுத்தாபனத்துக்கு ஏற்படும் நட்டத்தை முடிந்தவரை பொறுத்துக் கொள்ளமுடியும் என்றும் தெரிவித்தார்.

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் எரிசக்தி அமைச்சரிடம் நேற்று (07) வினவிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவிவத்தார்.

கடந்த மாதம் முதல் டீசல் லீற்றர் ஒன்றுக்கு 35 ரூபாயும் பெற்றோல் லீற்றருக்கு 7 ரூபாயும் நஷ்டமடைந்து வருவதாகவும் மசகு எண்ணெய் விலை மேலும் உயர்ந்தால் நஷ்டம் மேலும் அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

டிசெம்பர் மாதத்தில் ஒரு பரல் மசகு எண்ணெயின் விலை 74 டொலராக இருந்த போதிலும், கடந்த வார இறுதியில் ஒரு பரல் மசகு எண்ணெயின் விலை கடுமையாக உயர்ந்து 93 டொலரைத் தாண்டியுள்ளது என்றார்.

மசகு எண்ணெய் விலை உயர்ந்த போதிலும், எரிபொருள் விலையை அதிகரிகரிப்பதற்கான எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.

கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேற்றுமுன்தினம் வாகன நெரிசல் காணப்பட்டதுடன், சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 92 ஒக்டேன் பெற்றோலுக்கு தட்டுப்பாடு காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .