2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

குவேனியின் குடத்தை தேடியோருக்கு சிக்கல்

Janu   / 2023 டிசெம்பர் 05 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டி - நுரைச்சோலை, ஆலங்குடா பகுதியில் நீதவான் ஒருவருக்கு சொந்தமான தோட்டத்தில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட  நான்கு பேரை  விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் ஞாயிற்றுக்கிழமை (03) உத்தரவிட்டுள்ளார்.

குறித்த தோட்டத்தின் காவலாளி உட்பட புதையல் தோண்டுவதற்கு உதவிய கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த மூவரே  இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் எம்.எம். இக்பால்க்கு சொந்தமான 25 ஏக்கர் தோட்டத்தில் புதையல் தோண்டப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸில் அளித்துள்ள முறைப்பாட்டுக்கமைய  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின்போதே  சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

புதையல் தோண்டப்பட்ட தோட்டத்தில் கடந்த 15 வருடங்களுக்கும் மேல் காவலாளியாக கடமை புரிந்து வரும் சந்தேக நபர், அந்த தோட்டத்தில் குவேனி பாவித்ததாகக் கூறப்படும் செம்பு வகையைச் சேர்ந்த குடம் ஒன்று புதைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை தேடியே தோட்டத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரஸீன் ரஸ்மின்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .