2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

குரங்கு பறித்த குரும்பை விழுந்ததில் நபர் மரணம்

Editorial   / 2024 டிசெம்பர் 02 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ஆராய்ச்சி

குரங்கு பறித்த குரும்பை நபரொருவரின் கழுத்தில் விழுந்ததில், அந்த நபர் உயிரிழந்த சம்பவமொன்று புலத் கொஹுபிட்டிய, மேல் நியூஸ்மீர், பிரிவு இலக்கம் 3 இல்  இடம்பெற்றுள்ளது.  

 ஒரு பிள்ளையின் தந்தையான 81 வயதான ஏ.ஜி.ஜயசேன  என்பவரே உயிரிழந்துள்ளார். வீட்டுக்கு அருகே இருக்கும் தென்னை மரங்களில் இருந்து விழுந்துகிடந்த தேங்காய்களை கடந்த 27ஆம் திகதியன்று பொறுக்கி கொண்டிருந்த போது,  தென்னை மரத்தில் இருந்து குரும்பை குரங்கு பிடிங்கியுள்ளது. அதன்போதே அந்த குரும்பை, அந்நபரின் கழுத்து பகுதியில் விழுந்துள்ளது.

கழுத்தில் விழுந்தது. பின்னர் குறித்த நபர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதற்கிடையில், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டார்.

நோயாளி கேகாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு  தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 29ஆம் திகதி உயிரிழந்தார்

 புலத் கொஹுபிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .