2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

குடிபோதையில் விபத்து : முன்னாள் டிஐஜி கைது

Editorial   / 2023 ஒக்டோபர் 29 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தை அடுத்து,  ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவை (டிஐஜி) கைது செய்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து, மரைன் டிரைவ் பகுதியில் சனிக்கிழமை (28) இரவு இடம்பெற்றுள்ளது.

மூத்த டி.ஐ.ஜி.யின் வாகனம் மற்றொரு காருடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது, பின்னர் சுற்றுலாப் பேருந்து மீது மோதி விபத்துக்கு உள்ளானது.  விபத்து நடந்தபோது மூத்த டிஐஜி குடிபோதையில் இருந்ததாக பொலிஸ்  வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரை கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .