2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூடு ; சந்தேக நபர் உட்பட ஐவர் கைது

Janu   / 2025 மார்ச் 25 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகலகம் வீதியில் மார்ச் 17 ஆம்  திகதி இரவு, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

அதற்கமைய துப்பாக்கிச்சூடு நடத்திய , கிராண்ட்பாஸ், வெஸ்குமார  வீதியை சேர்ந்த  32 வயதுடைய சந்தேக நபர் செவ்வாய்க்கிழமை (25)  அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.   

சந்தேக நபர் அளுத்கடை  நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் மற்றும் ஒரு பெண்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X