2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

கான்ஸ்டபிளை கழுத்தை நெரிக்க முயன்றவர் மரணம்

Editorial   / 2023 ஒக்டோபர் 15 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரை சுட்டுக் கொன்றதுடன் மேலும் இருவரை படுகாயப்படுத்திய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 21 வயது இளைஞன், கைவிலங்குகளுடன் பொலிஸ் கான்ஸ்டபிளை கழுத்தை நெரிக்க முயற்சித்துள்ளார்.

அவ்வாறு முயற்சித்த போது இருவரும் மல்லுக்கட்டிக்கொண்டனர். அதில் காய​மடைந்த சந்தேகநபர், ஞாயிற்றுக்கிழமை (15) மரணமடைந்துள்ளார் என்று  பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் கான்ஸ்டபிளும் ஆபத்தான நிலையில் அவிசாவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவிசாவளை தலைமையக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இரட்டை படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவிசாவளை மணிங்கமுவ பகுதியைச் சேர்ந்த மகேஷ் தனஞ்சய என்பவரே உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .