Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Janu / 2024 ஜூலை 25 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இளைஞன் ஒருவன் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் புதன்கிழமை (24) இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை , ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞன் ஒருவனே இவ்வாறு தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் கடைமையாற்றும் குறித்த இளைஞன் தனது காதலிக்கு வீடியோ அழைப்பை எடுத்து தொடர்பில் இருந்த நிலையிலேயே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மேலும் மரணமடைந்த இளைஞனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை புறக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
எச்.எம்.எம்.பர்ஸான்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .