Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 15, சனிக்கிழமை
Editorial / 2025 பெப்ரவரி 13 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகம் முழுவதும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி காதலர் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
இந்த தினத்தை வர்த்தகர்களும் போதைப்பொருள் கடத்தல்காரர்களும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர்.
அதன்படி, நாளை வெள்ளிக்கிழமை 14ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள காதலர் தினத்தில் பல்வேறு குற்றச் செயல்கள் குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காதலர் தினத்தன்று இளைஞர், யுவதிகளை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுதல், சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்துதல், மோசடிகளில் ஈடுபடுதல், பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் நடவடிக்கைகள் குறித்து மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும்.
காதலர் தினத்தன்று இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்களிலிருந்து இளைஞர்களும் யுவதிகளும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
இவ்வாறான குற்றச் செயல்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கவும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். (S.R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago