2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

காணாமல் போயிருந்த நால்வர் மீட்பு

Janu   / 2023 நவம்பர் 19 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாராவில், முஹூதுகட்டுவ பிரதேசத்தில் கடலுக்குச் சென்று காணாமல் போயிருந்த ஜப்பானிய பிரஜை உட்பட நான்கு பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மாராவில், முஹூதுகட்டுவ பிரதேசத்தில் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஜப்பானிய பிரஜை உட்பட நால்வர் சனிக்கிழமை (18) மாலை காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன படகின் உரிமையாளரான மாராவில் - வடக்கு முதுகட்டுவைச் சேர்ந்த ஸ்ரீயானி ஜீவனி பெர்னாண்டோ மாரவில் பொலிஸாருக்கு இது குறித்து அறிவித்துள்ளார்.

மீன் பிடிக்கும்போது திடீரென பெய்த மழையுடன்  படகு கடலில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

படகை ஓட்டிச் சென்றவர்கள் இது குறித்து கரையில் இருந்த மற்றொரு மீனவருக்கு தொலைபேசி  மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்படி படகு கவிழ்ந்ததாக கூறப்படும் பகுதிக்கு சென்ற மற்றொரு குழுவினர் படகை ஓட்டி சென்றவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

எனினும் படகில் இருந்த ஏனைய நான்கு பேரும் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டாளர், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதுடன் அவர்களை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ள நிலையில், படகில் இருந்த நான்கு பேரும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 ரஸீன் ரஸ்மின்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .