Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 05, ஞாயிற்றுக்கிழமை
Simrith / 2024 டிசெம்பர் 31 , பி.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு பிரதான நீதவான் திலின கமகேவை மொரட்டுவ மாவட்ட நீதிபதி பதவிக்கு இடமாற்றம் செய்து நீதிச்சேவை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
புதிய கொழும்பு பிரதான நீதவானாக கோட்டை பிரதான நீதவான் தனுஜா லக்மாலி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு கல்கிசை நீதவானை நியமிக்க நீதிச்சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
ரூபாய் 8 மில்லியன் இலஞ்சம் தொடர்பான வழக்கை நடத்துவதற்கு மற்றுமொரு நீதவானை நியமிக்குமாறு கோரி திலின கமகே நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த எழுத்துமூல கோரிக்கையை அடுத்து இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் சலோச்சன கமகே தொடர்பானது.
சலோச்சன கமகே தனது உடன்பிறந்தவர் என்பதால், திலின கமகே, குறித்த வழக்கை தான் விசாரிப்பதில் உள்ள முரண்பாட்டை கோரிக்கைக் கடிதத்தில் மேற்கோள் காட்டியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
32 minute ago
59 minute ago