2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

களு துஷாராவின் மகன் கைது

Janu   / 2024 மே 27 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் போது உயிரிழந்த , பாதாள உலகக் குழு உறுப்பினரான மஹரகம களு துஷாரவின் மகன் அவரது நண்பர்கள் மூவருடன் ,  மாத்தறை, பிக்வெல்ல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளார் .

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொண்ட தேடுதலின் போதே குறித்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதன்போது அவர்களிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதை குளிசைகள் அடங்கிய பொதி ஒன்றும், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும்  மீட்கப்பட்டுள்ளது .

கைது செய்யப்பட்ட நால்வரும் , விருந்தொன்றை ஏற்பாடு செய்வதற்கும் துப்பாக்கியில் சிக்கியிருந்த சன்னங்களை அகற்றுவதற்கும் கொழும்பில் இருந்து மாத்தறைக்கு  வந்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். 

மேலும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .