2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

களனி மாணவர்கள் நால்வருக்கு வகுப்பு தடை

Editorial   / 2023 டிசெம்பர் 05 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி பல்கலைக்கழக மாணவர்கள் நால்வருக்கு வகுப்பு  தடை விதிக்கப்பட்டுள்ளதாக   பல்கலைக்கழக நிர்வாகம்  செவ்வாய்க்கிழமை (05) அறிவித்துள்ளது.

பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், இனங்காணப்பட்ட நால்வருக்கே வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பீடத்தைத் தவிர்த்து, ஏனைய பீடங்களை மறு அறிவித்தல் மூடிவிடும் அறிவிப்பை  களனிப் பல்கலைக்கழகம் திங்கட்கிழமை (04) விடுத்திருந்ததது. மருத்துவ பீடத்தை தவிர, ஏனைய பீடங்களைச் சேர்ந்தவர்கள், விடுதிகளில் இருந்து வெளியேறுவதற்காக இன்று (05) காலை 8 மணிவரையிலும் காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர், ஓய்வறையில் இருந்த போது அவரை கடத்திச் சென்று, மாணவர் மத்திய நிலையத்தின் நுழைவு வாயிலில் கட்டி வைத்து தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .