2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

குளத்தில் நீராடிய இளைஞர் நீரில் மூழ்கி பலி

Freelancer   / 2025 ஏப்ரல் 18 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். வரணி சிட்டிவேரம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் நீராடிய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

தவசிக்குளம் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த சிவராசு சிலுசன் (வயது 23) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை (17) புதுவருட கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சுமார் எட்டுப் பேர் அடங்கிய நண்பர்கள் சிட்டிவேரம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் நீராடிய போது குறித்த இளைஞர் தாமரைக் கொடியில் சிக்குண்ட நிலையில் மீட்கப்பட்டு வரணி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துள்ளார்.

சடலம் மரண விசாரணைக்காகவும் பிரேத பரிசோதனைக்காகவும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X