2025 பெப்ரவரி 04, செவ்வாய்க்கிழமை

காலி கோட்டை தபால் நிலையத்தைப் புதுப்பிக்கத் திட்டம்

Simrith   / 2025 பெப்ரவரி 03 , பி.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முதல் ஐந்து தபால் நிலையங்களில் ஒன்றான காலி கோட்டை தபால் நிலைய வளாகத்தை புதுப்பித்து, அதை பயனுள்ள ரீதியாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் அங்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இது டச்சு காலனித்துவ காலத்தில் கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தில் அமைந்துள்ளதுடன், நீண்ட காலமாக சரியான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு இல்லாததால், தற்போது முழுமையாக பழுதடைந்த நிலையில் உள்ளது.

இது குறித்து மிக விரிவாக ஆராய்ந்த அமைச்சர், இந்த வளாகத்தைப் பயனுள்ள ரீதியாகப் பயன்படுத்தினால், அது இலங்கை தபால் துறைக்கு விசேட மதிப்புடையதாக மட்டுமல்லாமல், அதிகளவு வருமானம் ஈட்டக்கூடியதாகவும் மாற்ற முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X