Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 23, சனிக்கிழமை
Freelancer / 2024 நவம்பர் 20 , பி.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் மறுமலர்ச்சி யுகத்திற்கு ஏற்ற பிரஜைளை உருவாக்கக்கூடிய, மன அழுத்தமில்லாத கல்விக்காக மாணவர்களின் நம்பகத்தன்மையை நிலைநாட்ட அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக புதிய பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் இன்று (20) தனது அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,
கல்வி போன்றதொரு விடயத்துடன் தொடர்புடைய அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
புதிய அரசின் கொள்கைகளின்படி, கல்விக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டு, பாடசாலைக் கல்வியானது முறையாகவும் கால ஒழுங்கிலும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட வேண்டும்.
மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கல்வி கற்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
தற்போது கல்வித்துறையில் நிலவும் பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago